Friday, September 7, 2007

அமுக்கவெடி விபத்தில் மூவர் கொல்லப்பட்டனர்

மட்டக்களப்பு வந்தாறுமூலை உப்போடை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தில் அமுக்க வெடி விபத்தில் சாரதியான 41 வயதுடைய கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை, 17 வயதுடைய தங்கராசா குகன், 41 வயதுடைய கதிர்காமன் தவராசா ஆகியோர் கொல்லப்பட்டனர்.

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
தங்கள் பதிவுகள் எல்லாவற்றுக்கும் பின்னூட்டாவிடினும் படிக்கிறேன்.
மட்டக்களப்பில் நல்ல வயற்பாட்டுக்கள், நாட்டுப் பாடல்கள் உண்டு. சில நண்பர்களால் அறிந்துள்ளேன்.
பதிவாக இடமுடியுமா??

தேனாடான் said...

யோகன் பாரிஸ் அவர்களே, நாட்டார் வழக்காற்றியலில் பல பாடல்கள் வழக்கொழிந்து போய் விட்டன, தெரிந்தனவற்றை தர முயற்சிக்கின்றேன். ஞாபகமறதியூட்டும் வயதல்லவா!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
நினைவுக்கு வருவதையாவது பதிவு செய்து வைப்போம். பின்பு அதுவுமின்றிப் போய்விடும்.இப்படி எத்தனை எழுத்து வடிவின்றிப் போய் விட்டது.
ஒப்பாரி..யாரவது எழுதி வைத்துள்ளார்களா??எவ்வளவு சிறப்பான பண்டைத் தமிழ்வடிவம்.
இதுபோல் சிலாபம்-உடப்பு கரையோர மக்கள் கரைவலையிழுப்பு 'அம்பா' பாடல்கள்..எழுத்துருக் கொடுத்தால் இணையில்லா இலக்கியங்கள்..
யார் செய்வார்...